ABD 
விளையாட்டு

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

கேப்டனாக இல்லாத நிலையில் மிகவும் தாமதமாக களமிறங்குவது அணியில் ஒரு இடத்தை தவறான காரணங்களுக்காக ஆக்கிரமிப்பது போல் உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

Manigandan Raja

பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது :

ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தற்போதைய பங்கு என்ன என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெறும் பெயருக்காக மட்டும் இருப்பதை விட, அணியில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என விமர்சித்துள்ளார். மேலும், தோனி 8 அல்லது 9-வது வீரராக களமிறங்குவதில் தனக்கு துளியும் உடன்பாடு இல்லை எனவும், கேப்டனாக இல்லாத நிலையில் மிகவும் தாமதமாக களமிறங்குவது அணியில் ஒரு இடத்தை தவறான காரணங்களுக்காக ஆக்கிரமிப்பது போல் உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.