மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 46புள்ளி1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.