5-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ
ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை போட்டிகள்
5-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, போட்டிகள் ஜனவரி 14-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை வதோதரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.