4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.
115 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தீப்தி சர்மா மற்றும் நிக்கி பிரசாத்தின் சிறப்பான ஆட்டத்தால் 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு ஷுப்மன் கில்லும், கடைசி 2 போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கு ஷுப்மன் கில் தலைமை தாங்குகிறார். காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ராவும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
விவாகரத்துக்குப் பின் மன அழுத்தம்
விவாகரத்துக்குப் பிறகு ஏற்பட்ட மன அழுத்தத்தால் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் மனம் திறந்து பேசிய அவர், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்தில் 26 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாகவும், அதன் மூலம் வாழ்க்கையை மீட்டெடுத்ததாகவும் கூறியுள்ளார்.