5 
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்.. கோகோ காப் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் வெற்றி பெற்ற கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.

Web Team

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் வெற்றி பெற்ற கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.

பாரீசில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப், எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் கோகோ காப் 6க்கு 0 மற்றும் 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.