Harbajan singh 
விளையாட்டு

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கம் ஏமாற்றமளிப்பதாக ஹர்பஜன் சிங் கருத்து

ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, வெறும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Web Team

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்ட நிலையில், அது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும் என ஹர்பஜன்சிங் கூறினார். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பிற தொடர்களையும் ரோகித் வென்று கொடுத்ததை நினைவுகூர்ந்த அவர், ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவர் ரோகித் என்றும், குறைந்தபட்சம் ஆஸ்திரேலியா தொடருக்காவது அவரை கேப்டனாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.