தான் தேர்வாளராக இருந்தால் சூர்யவன்ஷியை டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், வைபவ் சூர்யவன்ஷி முதிர்ச்சியடையட்டும் என காத்திருக்க வைக்காதீர்கள் எனவும், அவர் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முதிர்ச்சி தன்மையுடன் விளையாடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் ஆசிய கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்திருந்தால் தொடக்க ஆட்டகாரர்களாக சூர்யவன்ஷி அல்லது சாய் சுதர்சனை எடுத்திருப்பேன் என கூறினார்.