ICC Womens match 
விளையாட்டு

மகளிருக்காக புதிய தொடரை அறிமுகம் செய்தது ஐசிசி

மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி எனப்படும் புதிய தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Web Team

உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக 8 அணிகள் பங்கேற்கும் புதிய தொடரை ஐசிசி அறிமுகம் செய்தது. மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி எனப்படும் புதிய தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் வருகிற 20-ந் தேதி பாங்காக்கில் தொடங்குகிறது. இந்த தொடரில் தாய்லாந்து, நெதர்லாந்து, PNG, ஐக்கிய அரபு, ஸ்காட்லாந்து, நமிபியா, தன்சானியா, உகாண்டா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.