ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில், ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் காரணமாக, வீராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து 5-ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார்.