தெற்காசிய கால்பந்து தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 10-வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.
முதல் பாதியில் இந்தியா 0-க்கு 1 என பின்தங்கிய நிலையில், 2-வது பாதியில் ‘ரெட் கார்டு’ கிடைத்து ஒருவர் வெளியேற்றப்பட பாகிஸ்தான் 10 வீரர்களுடன் விளையாடியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய இந்தியா 2 கோல் அடித்து 2-க்கு 1 என்கிற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.