ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி இந்திய வீரர் அர்ஜுன் ராஜ்புத் சதம் வீண்
பாகிஸ்தானுக்கு எதிரான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஓமனில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த தொடரில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
46.3 ஓவரில் 208 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. அர்ஜுன் ராஜ்புத் சிறப்பாக விளையாடி 85 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜஹூர் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.