நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 35 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை.
7 ஓவர்கள் குறைவாக வீசியதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.