இந்திய பவுலர்கள் அதிக முறை பவுல்டு முறையில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ள தொடராக லார்ட்ஸ் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய பவுலர்கள் எதிரணி வீரர்களை 12 முறை கிளீன் பவுல்டாக்கி மிரள வைத்துள்ளனர். இதற்கு முன் 1955 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 10 முறை ஸ்டம்பை தகர்த்து இருந்தனர்.