ஹாக்கி  
விளையாட்டு

தென்கொரியாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்த இந்தியா

ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி "செமி பைனல்" 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபாரம்

Manigandan Raja

ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி "செமி பைனல்" 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபாரம்

பஞ்சாப்பில் நடைபெற்ற ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் அரையிறுதி சுற்றில் கோல் மழை பொழிந்த இந்தியா, தென் கொரியாவை 8-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

India hockey

இதன் மூலம், இந்தியா சாதனை அளவாக 7-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

சிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் தலா 2 கோல்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், அங்கத் பிர் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.