கிடாம்பி ஸ்ரீகாந்த் 
விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா அபாரம்

கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் பெண்கள் பிரிவில் அஷ்மிதா, ரக்ஷிதாவும் 2-வது சுற்றுக்கு தகுதி

Manigandan Raja

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்சயா சென் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் கோகி வடனாபேவை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.

லக்சயா சென்

மற்றொரு ஆட்டத்தில் பிரான்சின் அர்னாடு மெர்கில்லை லக்சயா சென் வென்றார். மேலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிஹா, ரக்ஷிதா ராம்ராஜ் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.