காமன்வெல்த் கபடி போட்டியில் இந்திய ஆடவர் அணி அபாரம் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் 54-20 என இலங்கையை வீழ்த்திய இந்தியா
காமன்வெல்த் கபடி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆடவர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 54-க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.