கால்பந்து  
விளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் சென்னை - பஞ்சாப் அணி போட்டி டிரா

2 அணிகளும் தலா 1 கோல் மட்டுமே அடித்தன

Manigandan Raja

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் சென்னை - பஞ்சாப் அணி போட்டி டிரா 2 அணிகளும் தலா 1 கோல் மட்டுமே அடித்தன

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுமே தலா ஒரு கோல் அடித்தன.

ஆட்டம் டிரா

2-வது பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்ததால் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளன. சொந்த மண்ணில் வெற்றி பெறும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டதால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.