Dhoni house 
விளையாட்டு

மகேந்திர சிங் தோனி வீட்டிற்கு வருகை தந்த இந்திய அணி வீரர்கள்

இந்தியா மற்றும் தென்ஆப்பிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது.

Web Team

இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்காக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு வருகை தந்த விராட் கோலி, ரிஷப் பண்ட், ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு தோனி வீட்டில் விருந்தளிக்கப்பட்டது. தோனியின் வீட்டிற்கு வருகை தந்த வீரர்களின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தியா மற்றும் தென்ஆப்பிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது.