பேட்மிண்டன் தொடர் 
விளையாட்டு

இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி

உன்னதி ஹூடா, தன்வி சர்மா அபார ஆட்டம் ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடியும் அசத்தல்

Manigandan Raja

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் உன்னதி ஹூடா, தன்வி சர்மா ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

லக்னோவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உன்னதி ஹூடா, சக வீராங்கனையான அன்மோல் கார்பை வீழ்த்தினார்.மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தன்வி சர்மா, இந்தோனேசிய வீராங்கனை பிரதிவியை வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடியும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.