தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா 3 வகையான போட்டிகளுக்கும் ஸ்மிருதி மந்தானா கேப்டன்
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.போட்டிகள் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.