ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தல்
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி 3-க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 17 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா, தொடர் நாயகியாக பிரதீகா ராவல் தேர்வாகினர்.