ஜானிக் சின்னர்  
விளையாட்டு

இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு முழங்காலில் ஆபரேஷன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகல் காயம் சரியாகி மீண்டு வர 3 மாதங்களாகும் என தகவல்

Manigandan Raja

இத்தாலியின் ஜானிக் சின்னர் முழங்காலில் செய்துள்ள ஆபரேஷன் காரணமாக, 2027-ல் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இவர் வலது முழங்காலில் ஆபரேஷன் செய்துள்ளதால், இதிலிருந்து மீண்டு வர 3 மாதங்களாகும் என கூறப்படுகிறது. ஆகவே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னர் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.