நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், குஜராத் மாநில கல்வி அமைச்சருமான ரிவாபா ஜடேஜா, தனது கணவருக்கு போதைப் பழக்கம் உட்பட எந்த தீய பழக்கமும் இல்லை என்றும், ஆனால் இந்திய அணியின் மற்ற வீரர்கள் அப்படியில்லை எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்ற போதும் தனது கணவருக்கு எந்த தீய பழக்கமும் இல்லை என்றும், ஆனால் மற்ற வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.