ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தால் முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.