ராக்கி அசத்தல் 
விளையாட்டு

லிஸ்ட் ஏ கிரிக்கெட்: ஃப்ளின்டாஃப் மகன் ராக்கி அசத்தல்

லங்காஷயர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்துள்ளது. லிஸ்ட் ஏ தொடரில் இந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Manigandan Raja

65 பந்துகளில் முதல் சதத்தை அடித்து ராக்கி அசத்தல்

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப் மகன் ராக்கி ஃப்ளின்டாஃப் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சாமர்செட் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் போட்டியில் 5-ம் இடத்தில் களமிறங்கிய அவர் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் 76 பந்துகளில் 10 பவுன்டரிகள், 7 சிக்ஸர்கள் என 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இவர் இடம்பெற்றுள்ள லங்காஷயர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்துள்ளது. லிஸ்ட் ஏ தொடரில் இந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

போலந்து, உக்ரைன் வீராங்கனைகள் அபார ஆட்டம்

கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிச் சுற்றில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டயானா ஷ்னைடர் ஆகியோர் மோதினார்.

இதில், ஸ்வியாடெக் 6-க்கு 2, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு காலிறுதி போட்டியில் எலினா ஸ்விடோலினா, ரஷ்யாவின் எகர்டினா அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் மோதினார். இதில், முதல் செட்டை இழந்த எலினா ஸ்விடோலினா, அதிரடியாக ஆடி அடுத்த 2 செட்களை 6-க்கு 0, 6-க்கு 3 என வென்றார்.