Manchester 
விளையாட்டு

ரூபன் அமோரிமை பதவிநீக்கம் செய்த மான்செஸ்டர் யுனைடெட்

நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் ரூபன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Manigandan Raja

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரூபன் அமோரிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் பயிற்சியாளராக இணைந்த ரூபன் அமோரிம், பல்வேறு வெற்றிகளை பெற்று தந்து அணியை வழி நடத்தி சென்றார். இதனிடையே கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் ரூபன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.