டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளை சீருடையை விட்டு விலகினாலும், அதனுடன் இணைந்த நினைவுகளிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டுமே விடைபெறுவதாகவும், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட உள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.