டெஸ்ட் போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் பேட்டி
புதிய பந்தை இந்தியா சிறப்பாக பயன்படுத்தியதாக பாராட்டு
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சமநிலையில் இருப்பதாக கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்தியா புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்தியதாகவும், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததாகவும் கூறினார். மேலும், ஆடுகளத்தின் தன்மை மெதுவானதாக மாறி வருவதால், தாம், ரச்சின் ரவீந்திரா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றார்.