ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியில் நேபாளத்தை 72 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான் ஏ அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோஹாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான், 42 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி 17.3 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.