ஆஸ்திரேலியாவின் பெர்த் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச்-ஐ மிகச் சிறந்த பிட்ச் என ICC வகைப்படுத்தியுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில், இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பெர்த் பிட்ச்-ன் மீது பல்வேறு விமர்சனம் எழுந்த நிலையில், பிட்ச்-ன் மதிப்பை ஆய்வு செய்த ஐசிசி நற்சான்று வழங்கியுள்ளது.