தமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி, மீண்டும் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் அவருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடை விதிக்கப்பெற்ற அவர், பின்னர் மீண்டும் களத்திற்கு வந்து கடந்த ஆண்டு சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று கவனம் ஈர்த்தார்.