PT Usha 
விளையாட்டு

பி.டி உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் காலமானார்

ஸ்ரீனிவாசன், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

Manigandan Raja

இந்திய தடகள வீராங்கனை பி.டி உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் காலமானார். திக்கோடி பகுதியில் உள்ள வீட்டில் ஸ்ரீனிவாசன் மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிகிறது.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஸ்ரீனிவாசன், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.