Tennis 1 
விளையாட்டு

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: கரோலினா முசோவா சாம்பியன்

தோஹாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் முசோவா விளையாடினார்.

Manigandan Raja

கரோலினா முசோவா சாம்பியன் :

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா சாம்பியன் பட்டம் வென்றார். தோஹாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் முசோவா விளையாடினார்.

தொடக்கம் முதல் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய முசோவா, 6-க்கு 4, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் விக்டோரியா எம்போகோவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.