ஏழ்மையான குடும்பத்தில்...
ஒரு காலத்தில் போர்ச்சுகலின் சிறிய தீவான மடெய்ராவில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், ஒருநாள் உலகையே தன் காலடியில் வைத்திருப்பான் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்தச் சிறுவனின் பெயர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
சிறுவயதில் வறுமை, குடும்பப் பிரச்சினைகள், அவமானங்கள் எனப் பல தடைகளைச் சந்தித்தார். ஆனால் அவரிடம் ஒரே ஒரு கனவு இருந்தது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக வேண்டும் என்பதே...
சாதனைக்கு மேல் சாதனை
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தொடங்கிய அவரது பயணம், ரியல் மாட்ரிட்டில் வரலாறாக மாறியது. சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், பலோன் டி ஆர் Ballon d'Or விருதுகள், சாதனைகளுக்கு மேல் சாதனைகள் என கால்பந்து உலகையே அதிர வைத்தார்.
விமர்சனங்கள் வந்தன. தோல்விகள் வந்தன. கண்ணீர் வந்தது. ஆனால், ரொனால்டோ ஒருபோதும் தனது முயற்சியை நிறுத்தவில்லை. தனது நாட்டிற்காக விளையாடி யூரோ கோப்பையையும் வென்று காட்டினார்.
சர்வதேச கால்பந்து வரலாற்றில்...
போர்ச்சுக்கல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்து, சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகள் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் வாழும் ஒரு பெயராக மாறியிருக்கும் ரொனால்டோவின் கால்பந்து பயணம் முடிவுக்கு வந்தாலும், அவர் படைத்த சாதனைகளும், அவர் கற்றுக்கொடுத்த விடாமுயற்சியும் ஒருபோதும் முடிவடையாது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சகாப்தம்
ஏனென்றால், வீரர்கள் ஓய்வு பெறலாம். ஆனால் ஜாம்பவான்கள் என்றென்றும் வாழ்வார்கள். CR7... ஒரு பெயர் அல்ல, அது ஒரு சகாப்தம். ஆம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சகாப்தம் தான்.