வாஸ்கோடகமா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 6க்கு 0 என படுதோல்வி அடைந்த விரக்தியில் சாண்டோஸ் அணி வீரர் நெய்மர் தேம்பி தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் வாஸ்கோடகமா மற்றும் சாண்டோஸ் அணிகள் மோதின.
இதில் சாண்டோஸ் அணி 6க்கு 0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் படுதோல்வியடைந்தால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார்.
அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதனம் செய்தபோதும் டக்அவுட்டுக்கு செல்லும் வழியில் அழுதபடியே வெளியேறினார்.