Smirirthi mandhana 
விளையாட்டு

ஸ்மிருதி மந்தனாவின் ஹல்தி கொண்டாட்டம்

இவர்கள் இருவருக்கும் நாளை திருமணம் நடைபெறுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்து மடல்

Web Team

ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்தையொட்டி நடைபெற்ற ஹல்தி கொண்டாட்டத்தில் இந்திய வீராங்கனைகள் ஒன்றுக்கூடி உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். முன்னதாக 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி உறுதிபடுத்தியிருந்தார். இவர்கள் இருவருக்கும் நாளை திருமணம் நடைபெறுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்து மடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.