Smirithi 
விளையாட்டு

ஸ்மிருதியின் வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதி!

பாலஷ்-க்கு திடீரென உடல்நிலை மோசமானதாகவும், ட்ரிப்ஸ் செலுத்தப்பட்டு தற்போது நலமாக இருப்பதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Web Team

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து, அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மிருத்தியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து அழுது கொண்டிருந்த பாலஷ்-க்கு திடீரென உடல்நிலை மோசமானதாகவும், ட்ரிப்ஸ் செலுத்தப்பட்டு தற்போது நலமாக இருப்பதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.