ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. இதனிடையே இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.