ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளி வீரரான சுழற்பந்து வீச்சாளர் சேனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.