China badmiton 
விளையாட்டு

சீனாவில் நடந்து வரும் பேட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்

பேட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடரில் இந்திய ஆண்கள் இரட்டையர் அணி வெண்கலம் வென்றுள்ளது.

Web Team

சீனாவின் ஹாங்சு நகரில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடரில் இந்திய ஆண்கள் இரட்டையர் அணி வெண்கலம் வென்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்வித் சாய்ராஜ் - சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங் - லியான் வெய்கெங் ((Liang Wei Keng and Wang Chang)) ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-10 என எளிதில் கைப்பற்றியது. இதனால் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என வென்றது. இதன்மூலம் சீன ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.