வங்கதேசத்துக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரையும் 2-க்கு 0 என கைப்பற்றியது.
செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 494 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 403 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.