தொடரை கைப்பற்ற மே.தீவுகள் அணிக்கு அதிக வாய்ப்பு வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வலுவான நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வலுவான நிலையில் உள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களும், வங்கதேசம் 386 ரன்களும் எடுத்தன.
வங்கதேச வீரர் ஹிரிடோய் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் குவித்தார்.
இது அந்த அணி வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். 2-வது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்துள்ளது.