ஒருநாள் போட்டியில் குறைந்த பந்தில் விரைவாக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மேத்யூ போர்டு இணைந்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியில் 8- ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு, 19 பந்துகளில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார்.
அவர் 16 பந்தில் 1 பவுண்டரி, 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
அதில், பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாகவே அரை சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டி வில்லியர்ஸ் சாதனையை மேத்யூ போர்டு சமன் செய்துள்ளார்.
டி வில்லியர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2015-ல் 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
10 வருடங்கள் கழித்து அவரது சாதனையை மேத்யூ போர்டு சமன் செய்துள்ளார்.