Deepthi sharma 
விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஏலம்

இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா அதிகபட்ச விலையாக 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து உபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Web Team

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் வீராங்கனைகள் ஏலத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா அதிகபட்ச விலையாக 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து உபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த வரிசையில் நியூசிலாந்தின் அமெலியா கெர் 3 கோடி ரூபாய்க்கும், இந்தியாவின் ஷிகா பாண்டே 2கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.