சிலிண்டர் விலை குறைப்பு 
தமிழ்நாடு

வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைப்பு.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,906

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 15 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Srini Vasan

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 15 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.

அதன்படி இந்த மாதம், வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.