கால்நடைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை மடக்கி பிடித்து மேச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நியூஸ் தமிழ் செய்தியாளர் குழு. நியூஸ் தமிழ் செய்தியாளர் குழு மடக்கி பிடித்த கால்நடைகள் கடத்தல் லாரிகளை எவ்வித விசாரணையும் இன்றி மேச்சேரி போலீசார் விடுவித்தனர். செய்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்வேன் என டிஎஸ்பி சண்முகசுந்தரம் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
கேரளாவுக்கு கால்நடைகள் கடத்தலின் பின்னணியில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாகனத்திற்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் என புகார் எழுந்துள்ளது.
டிஎஸ்பி பகிரங்க மிரட்டல்
செய்தியாளர் குழு மடக்கி பிடித்த லாரிகளை எந்த விசாரணையும் இன்றி மேச்சேரி போலீசார் விடுவித்த நிலையில், "உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்" என்றும், “உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன்” என்றும் செய்தியாளர் குழுவை பகிரங்கமாக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மிரட்டினார்.
பின்னணியில் ராக்கெட் ராஜா?
சட்டவிரோதக் கால்நடை கடத்தலின் பின்னணியில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாகனத்திற்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் என புகார் எழுந்துள்ளது.
2 லாரிகளை மடக்கி பிடித்து மேச்சேரி காவல்நிலையத்தில் செய்தியாளர் குழு ஒப்படைத்த நிலையில், லாரிகளை எந்த விசாரணையும் இன்றி மேச்சேரி போலீசார் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோவைக் காண...