2 
தமிழ்நாடு

5,358 பேருக்கு பட்டா வழங்கிய துணை முதலமைச்சர்.. அடுத்த கட்டமாக 18 ஆயிரம் பேருக்கு பட்டா - உதயநிதி

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கினார்.

Srini Vasan

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் நகர நிலவரி திட்ட வருவாய் ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு 4,958 பேர், வடசென்னை அனல் மின் நிலையத்தால் மறு குடியமர்வு செய்யப்பட்ட 400 குடும்பங்கள் என 5 ஆயிரத்து 358 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

பட்டாக்களை வழங்கிய பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், அடுத்த கட்டமாக 18 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.