தமிழ்நாடு

நேர்மையான விசாரணை நடக்கும் - டிஜிபி உறுதி

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு எதிரான பாலியல் வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெறும் என்று, சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உறுதி தெரிவித்தார்.

Azhagiri Arumugam

இதுகுறித்து, சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது;

மகளிர் பாதுகாப்பு தொடர்பான சிறந்த குறும்படங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிங்கப்பெண் படைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சிங்கப்பெண் படை நடவடிக்கையால் மகளிர் நம்பிக்கையாக உள்ளனர்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்

புகாருக்கு உள்ளான தவெக எம்எல்ஏ மீது நேற்று முன்தினம் தான் புகார் வந்தது. இதை வைத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி. விசாரித்து வருகிறார். நியாமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலையில் 30 எஸ்.பிக்கள், 15,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்ற ஏதுவாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவ்வாறு சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார்.