தவெக எம்எல்ஏக்கள் கவனத்திற்கு...
இந்தக் கூட்டத்தில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மக்கள் நலப்பணிகளில் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் கவனம் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
’எதிர்க்கட்சிகள் விரிக்கும் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்,’ என்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
’எம்.எல்.ஏ.க்கள் திசை மாறி சென்று விடக்கூடாது,’ என்றும் அறிவுறுத்தல் வழங்கினார்.
திமுக உடன் தான் போட்டி...
தவெக - திமுக இடையில்தான் போட்டி; எனவே திசை மாறி சென்று விடாதீர்கள், எதிர்க்கட்சியின் சதியில் சிக்கிவிடாதீர்கள், தவெக ஆட்சியை முடக்க எதிா்க்கட்சிகள் தொடா்ந்து சதி செய்வதால் கூடுதல் கவனம் தேவை,
தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துங்கள் என்று தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வா் விஜய் அறிவுரையும் வழங்கினார்.
நமக்கு எதிாிகள் அதிகம் என்பதால் எந்த டிராப்-இலும் சிக்கிக்கொள்ளாதீா்கள், நம் கூட்டணியில் உள்ளவர்களை தவிர நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகம், எனவே நமக்கு நிறைய எதிரிகள் உள்ளனர் என்றும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டி உள்ளார்.
மோசமான செயல்பாடுகள்..
எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவும் ஆலோசனை நடத்தினர் அப்போது, ’தவறிழைக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரிக்கை விடுத்தனர்.
சில எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன; உங்களது செயல்பாடுகள் முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எம்எல்ஏ-க்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புறப்பட்ட பெண் MLA-க்கள்
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நடைபெறும் கூட்டத்தில் இருந்து தவெக பெண் எம்எல்ஏக்கள் மட்டும் புறப்பட்டனர். முதலில் பெண் எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், அவர்கள் புறப்பட்டனர்.
மாமல்லபுரம் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு, முதல்வர் விஜய் தீபாவளி பரிசு வழங்கினார். பட்டு வேட்டி, சேலையை பரிசாக வழங்கி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.