குழந்தைகள் தினம்  நியூஸ்தமிழ்24x7
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலம் உறுதி செய்க - மு.க.ஸ்டாலின்

திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் குழந்தைகள் உலகம் விரியட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து கூறி உள்ளார். குழந்தைகளின் தனித்திறன்கள் வளர, அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்க துணைநிற்போம் என உறுதி தெரிவித்துள்ளார்.

Azhagiri Arumugam

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்.

உலகம் விரியட்டும்

அதற்காகத்தான், தி.மு.க. ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

நவம்பர்-14

பொறுப்புடன் துணை நிற்போம்

இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது திராவிட மாடல் ஆட்சியில், ஊட்டச்சத்தை உறுதிசெய், அன்புக்கரங்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், வானவில் மன்றம், வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்.

குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம். திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Happy Children's Day

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்

வீடியோவைக் காண...